இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா : புதிதாக 1,61,736 பேருக்கு தொற்று உறுதி

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட,இரண்டாவது அலை அதி வேகமாக பரவுவதோடு, கட்டுப்படுத்துவதற்கும் பெரும் சவாலாக உள்ளது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,89,453 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 879 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,22,53,697 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,71,058 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 12,64,698 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 10,85,33,085 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் -v தடுப்பூசி - மத்திய அரசு அனுமதி

Tue Apr 13 , 2021
இந்தியாவில் தற்போது கொரோனாவின் எண்ணிக்கையானது தொடர்ந்து 1.50 லட்சத்தை தாண்டிய நிலையிலேயே இருக்கிறது.நாடெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமடையாமல் தடுக்க மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் […]
sputnik-V-vaccine
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய