வளைய சூரிய கிரகணம் – ஓர் அரிய நிகழ்வு..

இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 வரை நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது வானில் நிகழ்கின்ற ஒரு அரிய நிகழ்வாகும். இந்த அரிய வானியல் நிகழ்வினை இந்தியாவில் நாம் காண முடியாது என்றாலும் இணையதளம் மூலமாக காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலகட்டத்தில் பள்ளி மாணவா்களும் பொதுமக்களும் கண்டுகளிக்கலாம்.

சூரியனின் ஒளியை நிலவு மறைக்கின்ற நிகழ்வு மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.அவை முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம்.

முழு சூரிய கிரகணம்:

நிலவானது சூரியனை முழுவதுமாக மறைப்பது முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

பகுதி சூரிய கிரகணம்:

சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைப்பது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

வளைய சூரிய கிரகணம்:

வளைய சூரிய கிரகணம் என்பது சூரியனின் விளிம்பு மட்டும் தெரியுமாறு சூரியனின் 90 சதவீதம் பகுதி முழுவதுமாக நிலவினால் மறைக்கப்படும் நிகழ்வு வளைய சூரிய கிரகணம் ஆகும்.

இன்று விண்ணில் தெரியும் இந்த வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளைத் தவிர வேறு எந்த இடத்திலும் பாா்க்க முடியாது. ஆனால், கனடாவின் சில பகுதிகள், கிரீன்லாந்து, ரஷியா போன்ற இடங்களில் இந்த வளைய சூரிய கிரகணம் தெரியும். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் சில பகுதிகள், வடக்கு அலாஸ்கா, கனடாவின் சில பகுதிகள், ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் இந்த சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வளைய சூரிய கிரகணம் இன்று (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.41 வரை நிகழவுள்ளது. குறிப்பாக நிலவானது சூரியனை வளைய வடிவில் மறைக்கின்ற அந்த முழு வளைய அமைப்பானது 3 நிமிஷங்கள் 51 நொடிகள் தெரியவுள்ளது. சூரியனை எக்காரணம் கொண்டும் நேரடியாக வெறும் கண்களால் பாா்க்கக் கூடாது. சூரிய கிரகணத்தின்போது மட்டுமல்லாமல் எப்பொழுதுமே நாம் சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பாா்க்கக் கூடாது. அதற்காகத் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி பார்க்கலாம் என்று ஏறினார்கள் கூறுகின்றனர்.

Next Post

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு : ஆக.2-ல் தொடக்கம் ..

Thu Jun 10 , 2021
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020 ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு தொடங்கப்படும் என்றும், இதற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றப்படும் என்றும் யுபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. […]
UPSC-Civil-service-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய