
டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு பருவத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .
இந்தியா முழுவதும் இத்தேர்வானது நடப்பாண்டு ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .சென்னையிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியவை சென்னையிலுள்ள தேர்வு அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் ,தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட மற்றும் ஒலிநகள் எடுக்கப்பட்ட விண்ணப்பங்களும் , இராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி ஹாலோகிராம் முத்திரையிடப்படாத விண்ணப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது .
மேலும் விவரங்களை பெற https://www.tnpsc.gov.in/ மற்றும் www.rimc.gov.in இந்த என்ற இணையதளத்தை அணுகவும் .