கொரோனா தடுப்பூசி செலுத்த வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகம்..

கொரோனா தடுப்பூசி செலுத்த வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு செய்யும் முறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்துவதற்கு https://www.cowin.gov.in/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பதிவு செய்யும் முறையை மிகவும் எளிமையாக்கும் விதமாக ‘வாட்ஸ்ஆப்’ மூலம் முன்பதிவு செய்யும் முறை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 58 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் கொரோனா உதவி மைய எண்ணிற்கு ( http://wa.me/919013151515 ) வாட்ஸ்ஆப் மூலம் ‘Book Slot’ என்று அனுப்பினால், உங்கள் எண்ணிற்கு வரும் ஓடிபி-யை வைத்து பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

Tue Aug 24 , 2021
தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரும். மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த […]
college-reopen-new-guidelines-announced
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய