
பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்லூரிகளில் இணையவழி மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று (31-5-2021) வெளியிடப்படுகிறது.மொத்தம் 2,28,441 மாணவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.63 சதவீதமாகும். 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் ,ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வெழுதலாம் என்று கூறப்பட்டுள்ளது .இதற்கான தேர்வு கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம்.மேலும், நடப்பு ஆண்டின் பருவங்களான இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவ மாணவர்களுக்கான (அரியர் தேர்வு உட்பட) தேர்வுகள் 14-06-2021 முதல் 14-07-2021 வரை நடைபெறும், இதற்கான தேர்வு கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை பெற www.tndte.gov.in என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.