
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது வெளியிட்டுள்ளது.
- தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும்.
- மேலும் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கையை அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
- கல்லூரிகளில் சோ்க்கை ஆணை பெற்ற மாணவா்கள் அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் விலகிவிட்டால் முழு கட்டணத்தையும் நிா்வாகம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலாண்மை கல்வி நிறுவனங்கள் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை செப்டம்பா் 20-ஆம் தேதி வரை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.