
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் கல்விக்கென புதிய திட்டங்களை வகுத்து அவற்றை அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றுமாறு பள்ளி கல்வித்து துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகளை குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது..,
- தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட தகவல்களை, கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (EMIS) யின் இணையதளம் வழியாக கையாளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- அரசு பள்ளி மாணவர்கள் எந்தவொரு நேரத்திலும் பாடங்களை கற்றுக்கொள்ளும் படி, TN-DIKSHA என்ற டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- மேலும், கற்பித்தல் தகவல்கள், அரசு பள்ளிகளை மேம்படுத்த தேவையான பங்களிப்புகள், பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆசிரியர்களுக்கான பேஸ்புக் ஒர்க்பிளேஸ், கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற வசதிகள் இந்த இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- EMIS இணையதளத்தை அனைத்து மாவட்ட கல்வித்துறைகளும் புதுப்பிக்க வேண்டும். வரும் நாட்களில் பள்ளிகள் குறித்த ஏதேனும் புகார்கள், தகவல்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் நேரடி விவரங்கள் கோருவதை தவிர்த்து அவற்றை EMIS இணையதளத்தில் தெரிவிக்கலாம்.
- நடப்பு 2021-22 கல்வியாண்டில், 1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2 ஆம் பருவ பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான தரவுகளை அனுப்பி வைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.