பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை வெளியீடு..

பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்தும், உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து இன்று தமிழக முதலவர் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  • 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து 20 சதவீதம் கணக்கிடப்படும். ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும் கணக்கிடப்படும்.
  • 11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு 10, 11 எழுத்துத்தேர்வு மதிப்பெண், செய்முறைத்தேர்வு மதிப்பெண்களாக மாற்றப்படும்.
  • 11ம் வகுப்பு எழுத்துத்தேர்வில் தோல்வி அடைந்திருந்த மாணவர்களுக்கு 35 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும்.
  • 11, 12ம் வகுப்பில் செய்முறை, அகமதிப்பீடு தேர்வுகளில் கலந்து கொள்ளாதவர்கள் தனித்தேர்வர்களாக கருதப்படுவார்கள்.
  • மதிப்பீடு முறையில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
  • கொரோனா பரவல் குறைந்தவுடன் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Sat Jun 26 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 671, ஈரோட்டில் 574 , சேலம் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 314 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 148 பேர் பலியாகியுள்ளனர். […]
district-wise-abstract-of-activecases-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய