
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ,ஒத்திவைக்கப்பட்டும் இருந்தன. சிஐஎஸ்சிஇ கவுன்சில் ஆனது கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு (ஐசிஎஸ்இ), 12ம் வகுப்பு (ஐஎஸ்சி) தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு தேர்வுகளின் முடிவுகளை கணக்கில் கொண்டு தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.இதனடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஐசிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் cisce.org அல்லது results.cisce.org ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஐ.சி.எஸ்.இ தேர்வை 2,909 மாணவர்களும், 2,554 மாணவிகளும் எழுதினர். இதில் 99.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும் ஐ.எஸ்.சி தேர்வைப் பொருத்தவரை, இந்த ஆண்டு 1,418 மாணவர்களும் 1,393 மாணவிகளும் பங்கேற்றனர்.இதில் 99.76 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.