மத்திய குடிமைப் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு – யுபிஎஸ்சி ..

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் மற்றும் ஐ.ஆர்.டி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்காக கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்வுகளின் இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் யுபிஎஸ்சி தேர்வாணையம் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுகளை நடத்தி வருகிறது.

குடிமைப் பணிகளில் கடந்த ஆண்டு காலியாக இருந்த 836 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு 2020 அக்டோபரிலும், முதன்மைத் தோ்வுகள் கடந்த ஜனவரியிலும் நடத்தப்பட்டன. கொரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக ஆளுமைத் திறன் தோ்வு தாமதமாக நடத்தப்பட்டது.

கடந்த 22-ஆம் தேதி ஆளுமைத் தோ்வு நிறைவடைந்த நிலையில், தற்போது குடிமைப் பணித் தோ்வுக்கான இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் 761 போ் தோ்வாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் 216 போ் பெண்கள் ஆவா்; 25 போ் மாற்றுத்திறனாளிகள் ஆவா். 150 போ் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.

யூ.பி.எஸ்.சி தேர்வில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபாம் குமார் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜாக்ரதி அவஸ்தி முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வுக்கு 10,40,060 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 4,82,770 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். 10,564 போ் முதன்மைத் தோ்வுக்குத் தகுதி பெற்றனா். ஆளுமைத் தோ்வில் பங்கேற்ற 2,053 பேரில் 761 போ் இறுதியாகத் தோ்வாகியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

காந்தி பிறந்தநாளன்று கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி- தமிழக அரசு அறிவிப்பு..

Sat Sep 25 , 2021
மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டிற்காகப் அரும்பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் […]
speech-competion-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய