
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .
கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட்டது.மேலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பருவத் தேர்வு மற்றும் உள்மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்ப்பட்டது.இந்நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 20,97,128 பேர் தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த நிலையில், 20,76,997 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதம் 99.4% ஆக உள்ளது. 98.89% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16,639 பேரின் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்கள் cbseresults.nic.in , cbse.gov.in இல் காணலாம். அல்லது Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிப்பெண் வெளியீட்டில் திருப்தி இல்லாத மாணவர்கள் கொரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.