
அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள், அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும் 6 முதல் 8 ஆம் வகுப்புக்குப் பள்ளிகளைத் திறந்து 2 வாரத்திற்கு பிறகு அதன்விளைவுகளை பொறுத்து 1 முதல் 5 ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்த ஆய்வு அறிக்கையை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தமிழக முதல்வரை சந்தித்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.