
என்ஜினீயரிங் மாணவர்களுக்கான மறுதேர்வு நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக செய்து வருகிறது. மறு தேர்வானது அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி மாதம் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வானது நத்தப்பட்டது.சின்ஹா தேர்வில் 4.25 லட்சம் மாணவர்கள் பங்குப்பெற்று தேர்வை எழுதினர்.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களில் 2.3 லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டன.இதில் 1.1 லட்சம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாப் பல்கலைக் கழகத்தால் நடைப்பெற்ற இந்த ஆன்லைன் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரியவந்ததால் மற்ற தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.பின்னர்,தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை தொடர்ந்து மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைகழகத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
தற்போது மறு தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அண்ணா பல்கலைக்கழகத்தால் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது.அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மறுதேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.,மேலும், தேர்வு எழுதிய 3,5,7-வது செமஸ்டர் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.