
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற செய்முறைத் தேர்வில் பங்கு பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு வரும் ஜூன் 11ஆம் தேதிக்குள் நடத்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.மேலும்,10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே – ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றானது உலகையே அச்சுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.இதில்,கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற செய்முறைத் தேர்வில்,கொரோனா தொற்று காரணமாக அல்லது தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா பாதித்ததன் காரணமாக தேர்வில் பங்கு பெற முடியாத மாணவ ,மாணவிகள் இருப்பின் அவர்களுக்கு ஜூன் 11 ஆம் தேதிக்குள் செய்முறை மறுதேர்வை முடிக்க பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.