
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான முதல் கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த மார்ச் 2020ல் 0.75% வட்டி விகிதத்தினையும், மே மாதத்தில் 0.40% வட்டியினை குறைத்திருந்த நிலையில், தற்போது வட்டியில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

நடப்பு நிதியாண்டிற்கான கூட்டத்தில் ரெப்போ விகிதம் வழக்கம்போல 4% ஆகவே தொடரும் எனவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவும், பேங்க் ரேட் 4.25% ஆகவும், எம் எஸ் எஃப் விகிதமும் 4.25% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.மேலும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்,2021-22ம் நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் சந்தைகளில் போதுமான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.