பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் மற்றும் கலந்தாய்வு தேதி வெளியீடு..

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதற்கான ரேண்டம் எண் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. அவற்றில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக இதுவரை 1,74,171 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், இவர்களில் 1,38,533 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து உள்ளனர் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை குழு கூறியுள்ளது.இதன் அடிப்படையில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கப்பட உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 16 வரை துணை கலந்தாய்வு நடைபெறும் எனவும், அக்டோபர் 20 க்குள் கலந்தாய்வை முடித்து விட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கூறியுள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Wed Aug 25 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 18,352 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,788 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 27 பேர் பலியாகியுள்ளனர்.இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,05,647-ஆக உயர்ந்துள்ளது. […]
District-wise-corona-updates-25-8-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய