எஸ்.எஸ் .ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் : அக்டோபர் 13 -ல் உலகமெங்கும் …

பிரம்மாண்ட இயக்குனரான எஸ்.எஸ் .ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமானது வருகிற அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஆர்ஆர்ஆர் படமானது இரு சுதந்திரப்போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜு ,கொமரம் பீம் என்ற இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான கதையாகும் . இப்படம் 1920 காலகட்ட படமாகும் .இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்துள்ளனர் .இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவு கே .கே செந்தில் குமார் .

தெலுங்கு ,தமிழ் ,ஹிந்தி,மலையாளம் மற்றும் இதர மொழிகளில் வெளியாக உள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் பாலிவுட் கலைஞர்களான அஜய் தேவ்கன் , ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி ,ஒலிவியா மாரிஸ் ,ஸ்ரியா சரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

கொரோன ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு ,தற்போது பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இப்படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .பாகுபலி பட வெற்றிக்கு பிறகு எஸ் .எஸ் .ராஜமௌலி – ஜூனியர் என்டிஆர் – ராம் சரண் கூட்டணியானது மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .ஆர் (ரத்தம் )ஆர் (ரணம் )ஆர் (ரௌத்திரம் ) ஆகியவற்றை விளக்குகிறது .

Next Post

காஜல் அகர்வால் நடிப்பில் இணையத் தொடர் : ஓடிடி தளத்தில் பிப்ரவரி 12 முதல் ...

Tue Jan 26 , 2021
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ,காஜல் அகர்வால் நடிப்பில் உருவான படம் இணையத் தொடர் ஆகும் .இப்படமானது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இணையத் தொடர் படமானது லைவ் டெலிகாஸ்ட் தொடரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும் .இப்படத்தில் காஜல் அகர்வால் ,வைபவ் ,கயல் ஆனந்தி போன்றோர் நடித்துள்ளனர் .இணையத் தொடர் படமானது பிப்ரவரி 12 ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் என […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய