பால்வெளி மண்டலத்திலிருந்து ரேடியோ அலை சமிக்ஞைகள் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..

பால்வெளி மண்டலத்தில் நமது சூரியக் குடும்பமும், நட்சத்திரங்களும், விண்கற்களும் உள்ளன. தற்போதைய கண்டுபிடிப்புகளின்படி சூரியக் குடும்பத்தில் மட்டும் உயிரினங்கள் வாழ்ந்துவரும் நிலையில் இதர கோள்களிலும், பால்வெளி மண்டலம் மற்றும் அதனைக் கடந்த வான்வெளியில் உயிரினங்கள் உள்ளனவா என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பால்வெளி மண்டலத்தின் மத்தியில் இருந்து ரேடியோ அலை சமிக்ஞைகள் வந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறைந்த அதிர்வெண் கொண்ட இந்த ரேடியோ அலைகள் நீண்ட தொலைவில் இருந்து வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரேடியோ சமிக்ஞைகளைக் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் போப் மற்றும் டஞ்சு தேசிய விண்வெளி ஆய்வகம் இணைந்து கண்டறிந்துள்ளனர்.

மேலும் 19 தொலைதூர சிவப்பு குறுங்கோள்களிடமிருந்து சமிக்ஞைகள் வந்துள்ளதாகத் தெரிவித்த விஞ்ஞானிகள் குறைந்த அதிர்வெண் பகுப்பாய்வி மூலம் அதனைக் கண்டறியும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்.

இந்த ரேடியோ அலைகளை ஆய்வு செய்வதன்மூலம் கோள்களின் காந்தப்புலம் மற்றும் கோள்களின் இருப்பு உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 18,987 பேருக்கு கொரோனா..

Thu Oct 14 , 2021
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. புதிய பாதிப்பு கடந்த 5 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 18,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,20,730 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 246 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் […]
corona-updated-india-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய