புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையான இன்றைக்கு சனிபகவான் அனுகிரகம் பெரும் ராசிக்காரர்கள் …

மானிடர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நிகழ்கால மற்றும் எதிர்கால நன்மைகள் பற்றி அறிய ஆவல் கொள்வது உண்டு .ஒவ்வொரு நாள் தொடக்கத்திலும் ,நாம் அனைவருக்கும் அன்றைய நாள் நல்ல நாளாகவும் ,அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகவும் அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும் .இதனை அறிந்து கொள்வதற்கு நமக்கு உதவியாக இருப்பது ராசி பலன்களாகும் .நவகிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்களுக்கு ஏற்ப நமது வாய்ப்புகளும் வெற்றிகளும் அமைந்திருக்கும் .

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களே ,உங்கள் தொல்லைகள் அனைத்தும் நீக்கப்படும் .நீங்கள் பண விஷயத்தில் சற்று விழிப்போடு இருக்க வேண்டும்,யாரையும் நம்ப வேண்டாம் .நீங்கள் இன்று ஆபத்து நிறைந்த எந்த விஷயத்தையும் எடுக்க வேண்டாம் .குடும்ப பிரச்சனையில் உள்ள சிக்கலைகளை தீர்ப்பதற்கு உங்கள் மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் .

நல்ல நேரம் : பிற்பகல் 3 .30 முதல் 8 மணி வரை

ரிஷபம்

இன்றைய நாள் நல்ல நாளாகும் .கடின உழைப்பானது வெற்றியை ஈட்டி தரும் .கல்வி துறையில் நீங்கள் மிக பெரிய வெற்றி அடைவீர்கள் .மன அழுத்தத்தை போக்கி கடின உழைப்பில் ஈடுபட வேண்டும் .அனுபவம் மிக்க அறினர்களிடமிருந்து நல்ல ஆலோசனைகளை பெறுவீர்கள் .
திருமண வாழ்வில் சில மன கசப்புகள் ஏற்படலாம் ,உங்கள் துணைவியை சந்தேகிப்பதை தவிர்த்து ,நம்பிக்கையோடு பாராட்டுங்கள் ..

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

மிதுனம்

இன்றய பொழுது உங்களுக்கு நல்ல பொழுதாக இருக்கும் .திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் .புதிய தொழில் மற்றும் திட்டத்தை தொடங்குவதற்கு ஏற்ற நேரமாக அமையும் .விடா முயற்சியுடனும் ,கடின உழைப்புடனும் இருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயமாகும் .இன்று நீங்கள் வருமானம் ஈட்டும் நாளாக அமையும் .உங்கள் வேளையில் உயர் பதவி பெறுவீர்கள் .

நல்ல நேரம் : மாலை 4 மணி முதல் 9 :20 மணி வரை

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்றைய நிகழ்வுகள் மற்றும் நேரங்கள் சாதகமாக இருப்பதாக தெரிய வருகிறது .பொருளாதார ரீதியாக நீங்கள் நன்மை அடையாளம் .குடும்ப வாழ்க்கையில் சில சிக்கலைகள் வர வைப்பு இருக்கிறது .உங்கள் மனைவியின் உடல் நலம் பற்றி விழிப்போடு இருக்க வேண்டும் .அவர்கள் உடல் நலத்தில் தொய்வு ஏற்பட்டால் மிகவும் கடினமாக இருக்கும் ..
திருமணமாகாதவராக இருந்தால் வரன் கூடி வரும் .நீங்கள் சுறுசுறுப்புடனும் ,நல்ல உடல் நலத்துடன் இருப்பீர்கள் ..

நல்ல நேரம் : மதியம் 12 .45 முதல் 6 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களின் உடல் நலம் நன்றாக அமையும் .நீங்கள் வியாபார கூட்டணியில் இருந்தால் நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .நீங்கள் அலுவலக பணியில் இருந்தால் எதிர்மறையான விஷயங்கள் வரலாம் ..வீணான செலவுகளை தவிர்ப்பது நல்லதாகும்.ஏனென்றால் எதிர்காலத்தில் இலக்கு வைத்த விஷயங்கள் நடைபெறாமல் போகலாம் .

நல்ல நேரம் : மதியம் 1 .30 மணி முதல் 4 .30 மணி வரை

கன்னி

கன்னி ராசி உடையவர்கள் மிகவும் சாதுரியமாக இருக்க வேண்டும் ,ஏனென்றால் உங்களுக்கு பிடிக்காதோர் அல்லது உங்கள் எதிரி உங்களுக்கு தீங்கை விளைவிக்கலாம் .உங்களின் முயற்சிகளை தடி செய்யலாம் .நீங்கள் பொறுமையாகவும் ,அமைதியுடனும் இருப்பது நல்லது .குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும் ,வர்த்தக ரீதியாக பங்குகள் வாங்க நினைத்தாள் ,இந்நேரம் சாதகமானது

நல்ல நேரம் : மதியம் 1 .30 முதல் 8 மணி வரை

துலாம்

துலாம் ராசி அன்பர்கள் நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிவராக இருந்தால் உங்களின் பணிகளை விரைவில் முடிக்க முயற்சி செய்யுங்கள் .ஏனெனில் உங்களின் மேல் அதிகாரி உங்களை கேள்வி எழுப்ப கூடும் .அது உங்களுக்கு மன கசப்பை ஏற்படுத்தும் .நீங்கள் உங்கள் குடும்பத்துடனும் ,உங்கள் மனைவியுடனும் நல்ல உறவினை மேற்கொள்வது நல்லது .முரண்பாடான அணுகுமுறை உங்களுக்கு விமர்சனங்களை எழுப்ப கூடும் .உடல் நலத்தை பேணி காத்தல் நல்லது .மலச்சிக்கல் போன்ற உடல் பிரச்சனைகள் வரக்கூடும் .காரமான உணவு பொருட்களை தவிர்த்தல் நல்லது .

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் இரவு 8 .20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம் அன்பர்களே உங்கள் உடல்நலத்தில் மிகவும் பின்னடைவு ஏற்படும் .இந்நேரத்தில் வேலையே தவிர்த்து வீட்டில் இருப்பது நல்லது .ஏனென்றால் மோசமான உடல்நிலை உங்கள் வேலையை பாதிக்கும் .தொலைதூர பயணத்தை கைவிட்டால் நல்லது . வர்த்தக ரீதியில் சிறிய முதலீட்டில் பெரிய கவனம் தேவை .பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் அது உங்களுக்கும் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் நல்லது .உங்கள் அன்பும் தோழமையும் உங்களுக்கு நன்மையும் ,நிம்மதியையும் தேடி தரும் .

நல்ல நேரம் : மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை

தனுசு

நீங்கள் பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது .நிதி நெருக்கடிக்கு ஆளாக படுவீர்கள் .பண செலவு அதிகரிக்கும் .வீண் செலவை தவிர்த்தல் நல்லது . உங்கள் முதலாளியுடன் மன கஷ்டங்கள் மற்றும் குழப்பங்கள் இருக்கலாம் .இதனால் உங்கள் உடல்நிலையில் மாற்றம் ஏற்படலாம் .வணிக ரீதியாக பல நன்மைகள் கிடைக்க வாய்ப்பு மிக குறைவு.குடும்ப வாழ்க்கை சீராக அமையும் .உங்கள் துணைவியுடன் இணக்கமான உறவை மேற்கொள்வீர்கள் .

நல்ல நேரம் : மாலை 5 முதல் 9 மணி வரை

மகரம்

மகர ராசி அன்பர்களே நீங்கள் வியாபார பின்னணியில் இருந்தால் ,சில கடினமான இன்னல்களை சந்திக்க நேரிடும் ,இது போன்ற இன்னல்கள் உங்கள் வியாபார நண்பர்களின் உதவியால் சரி செய்யப்படும் .நீங்கள் உங்கள் நிதி சார்ந்த விஷயங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது .உங்கள் குடும்ப உறவில் இன்பம் இருக்கும் .உங்கள் பெற்றோர்களின் உடல் நிலையை கவனித்து வர வேண்டும் .

நல்ல நேரம் : காலை 11 .25 மாலை 6 மணி வரை

கும்பம்

நீங்கள் சிறிய விஷயத்துக்கு கூட மன வலிமை குன்றி காணப்படுவீர்கள் .அது உங்களை எதிர்மறை விஷயத்துக்கு கொண்டு செல்லும் .நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிவராயின் ,உங்களின் மேல் அதிகாரியின் உதவியால் நல்ல நிலைமைக்கு செல்வீர்கள் .பணம் பெறுவதற்கான தடைகல் நீங்கி உங்களின் பணம் பெறப்படும் .வணிக ரீதியாக பெரிய திட்டத்தை தீட்டலாம் ,அது வெற்றியை அளிக்கும் .உங்கள் குடும்ப வாழ்க்கையில் இன்பம் செழிக்கும் .

நல்ல நேரம் : மாலை 4 .30 இரவு 8 மணி வரை

மீனம்

நீங்கள் அரசு பணிக்காக கடுமையாக உழைப்பை வெளிப்டுத்திகிறீர்கள் என்றால் அதற்கான பலனை பெறுவீர்கள் .இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் .பல பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நன்மையை தரும் .மற்றவருடன் பேசும்போது நன்கு அறிந்து பேச வேண்டும் இல்லையென்றால் அது மனக்கசப்பை ஏற்படுத்தும் .

நல்ல நேரம் :காலை 10 மணி முதல் மாலை 3 .25 மணி வரை

Next Post

திருவாடானை - ஆடானைநாதர் கோவில்-முக்தி பெற மற்றும் முன்ஜென்ம தீய வினைகள் நீங்க ...

Sat Sep 26 , 2020
சிவஸ்தலங்களில் 9 வது தலமான பாண்டிய நாடு பாடல் பெற்ற தளமாக இருப்பது திருவாடானை ஆகும் .இங்கு வீற்றிருக்கும் இறைவனின்பெயர்:ஆடானைநாதர்,ஆதிரத்தினேசுவரர்,அஜகஜேஸ்வரர் மற்றும் இறைவியின் பெயர் -சிநேகவல்லி, அம்பாயிஅம்மை ஆகும். ஆலயத்தின் வழிபாடு மற்றும் சிறப்பு : அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில் ஸ்தளமானது காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் .இந்நேரங்களில் இறைவழிபாடானது நடைபெறும் . […]
thiruvaadanai-aadanai-naathar-kovil
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய