
பித்ரு தோஷம் ஒருவரது ஜாதகத்தில் இருக்குமேயானால் ,அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமலும் ,நீண்ட நாள் திருமணம் ஆகாமலும் இருப்பது ஒரு காரணமாக சொல்லப்பட்டு வருகிறது .இவ்வாறு உள்ளவர்கள் ,இத்தலத்திற்கு வந்து அம்மாவாசை நாட்களில் ,இறைவன் புஷ் வனநாதரையும் ,அம்பாள் சௌந்தர்யநாயகியையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி நன்மையே நடக்கும் என்பது வரலாறகும்.
திருவையாற்றை தலைமையாக கொண்டு சப்த ஸ்தானத் தளங்களில் ஆறாவது தலமாக விளங்குவது திருப்பூந்துருத்தி .தென்கரைத் தளங்கள் வரிசையில் 11 -வது தலமாக இருப்பது திருப்பூந்துருத்தி ஆகும் .
திருப்பூந்துருத்தி :
இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் ஆனது துருத்தி என அழைக்கப்படுகிறது .இக்கோவில் ஆனது காவிரிக்கும் ,குருமுருட்டிக்கும் இடையில் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது .திருப்பூந்துருத்தி ஆனது மேல் திருப்பூந்துருத்தி எனவும் ,கீழ் திருப்பூந்துருத்தி எனவும் அழைக்கப்படுகிறது .திருத்தலமானது மேல் திருப்பூந்துருத்தியில் அமைந்திருக்கிறது .
ஆலய வழிபாடு நேரம் :
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் ஆனது காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் ,மாலை 4 மணி முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும் .
கோவில் கட்டிட அமைப்பு :
ஐந்து நிலைகளுடன் கோவிலின் ராஜகோபுரமானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .இக்கோவிலின் பஞ்சமூர்த்தி மண்டபமானது கோபுர வாசலின் முன் உள்ளது .இறைவன் சன்னதிக்கு நேராக இல்லாமல் நந்தி ஆனது சற்றே விலகி உள்ளது (காரணம் : திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு செல்வதற்கு முன் ,இத்தலமானது அப்பர் உளமார தொண்டு செய்த தலமென்று எண்ணி ,காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்றார் ஞானசம்பந்தர் ,இதனை கண்ட இறைவன் ,நந்தியை சற்று விலகச் செய்து காட்சியளித்தார் ).மூலவர் புஷ்பவனநாதர் மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் எழுந்தருளியுள்ளார் .

திருஞானசம்பந்தர் – அப்பர் :
திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் நடந்த யாத்திரையை முடித்து கொண்டு திரும்பிய நிலையில் ,அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கி இருப்பது தெரிய வந்து திருஞானசம்பந்தர் அங்கு சென்று கொண்டிருந்தார் .அதை அறிந்த அப்பர் ,தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் ,கூட்டத்தோடு கூட்டமாக ,சம்பந்தர் அமர்ந்து வந்த சிவிகையை அப்பரும் சுமந்து வந்தார் .திருப்பூந்துருத்தி நெருங்கிய நிலையில் சம்பந்தர் ,அப்பர் எங்கு உள்ளார் என்று வினவினார் ,அதற்கு அப்பர் தங்கள் சிவிகையை தாங்கி பெரும் பேறு பெற்றவன் ஆவேன். இதை அறிந்த சம்பந்தர் உடனடியாக கீழே இறங்கி அப்பரை கண்டு வணங்கினார்.அப்பர் மாற்று சம்பந்தர் இருவருமே மனமார பேசி ஒருவரை ஒருவர் தொழுது போற்றினர்.