
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புரவி புயலாக உருவெடுத்துள்ளது .இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது .
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும் புயலாக வலுப்பெற்று ,இலங்கையின் திருக்கோணமலை அருகே 400 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது .இந்த புயலானது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி திரிகோணமலைக்கு மிக அருகே டிசம்பர் 2ஆம் தேதி ,மணிக்கு 75 கி.மீ முதல் 95 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். பின்னர் இந்த புயலானது மன்னார் வளைகுடா பகுதியில் டிசம்பர் 3ஆம் தேதி காலையில் வந்தடைந்து, அங்கிருந்து கன்னியாகுமரி – பாம்பன் இடையே டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை பாம்பன் – குமரி இடையே தென்கிழக்கு கடற்கரையில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்,மற்றும் பிற இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது .
புரவி புயலானது கரையை கடக்கும் நிலையில் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .