
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வந்தது.கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.தற்போது தொற்றானது நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து கொண்டே வருவது சற்றே ஆறுதலை கொடுக்கிறது.
கொரோனா தொற்றால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது யார் யார் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தற்போது தொற்று அதிகமாக உள்ள தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:
- ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94-க்கும் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ஆக்சிஜன் அளவு 94-க்கும் அதிகமாக இருந்தால் வீட்டு தனிமையில் அனுமதிக்க வேண்டும்.
- ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 முதல் 90-க்குள் இருந்தால் கொரோனா சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கலாம்.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழே குறைந்திருந்தால் மட்டும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம். - 90-க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள நோயாளிகளை ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும்.
- 3 வகைகளாக நோயாளிகளைப் பிரித்து சிகிச்சை முறையைத் தொடர வேண்டும்.