‘2-டிஜி’ மருந்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு..

கொரோனா சிகிச்சைக்கான 2-டிஜி என்ற பவுடர் மருந்தினை கர்ப்பிணிகளுக்கு தரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2-டிஜி என்ற பவுடர் மருந்தை கொரோனா தொற்றில் இருந்து நிவாரணம் அளிப்பதற்காக டி.ஆர்.டி.ஓ. என்னும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வுக்கூடமான அணு மருத்துவம் மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து பவுடர் வடிவிலான ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

பவுடர் வடிவிலான 2-டிஜி மருந்தை அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.இந்த மருந்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது..

  • மிதமான மற்றும் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு இம்மருந்தை அதிகபட்சம் 10 நாட்கள் வரை டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும்.
  • இதய நோய், சுவாச பிரச்சினை, கல்லீரல், சிறுநீரக கோளாறு,கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய் உடையவர்களுக்கு இந்த மருந்தை தந்து பரிசோதிக்கவில்லை. எனவே இவர்களுக்கு இந்த மருந்தை பரிந்துரைக்கிறபோது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், 18 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கும் இந்த மருந்தை கண்டிப்பாக தரக்கூடாது.
  • மருந்தைப் பெற சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம், ஐதராபாத் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீசை அணுக வேண்டும்.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்..

Wed Jun 2 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகளவிலேயே இருந்து வருகிறது. மேலும் 483 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 25,205 ஆக உயர்ந்துள்ளது.மாவட்ட வாரியாக […]
district-wise-corona-in-tamilnadu-2-6-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய