பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு : வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்க அனுமதி..

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தற்போது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது . இந்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இன்று பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளை திறப்பதற்க்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் :

*பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்

*வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர்.

*பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும்.

*பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம்.

*ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

*வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர்.

*வகுப்பறைகளிலும் , பள்ளி வளாகத்திலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

*மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

*அனைத்து ஆசிரியர்களும், பள்ளி அலுவலர்கள், ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம்.

*பள்ளிகள் திறக்கும் முன் பள்ளி வளாகத்தில் உள்ள மேஜை, இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

*அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும்.

*பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.

Next Post

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு..

Fri Aug 27 , 2021
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற முதுநிலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 27) காலை பல்கலைக்கழகத்தின் அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கலோரிகள் மூடப்பட்டு ,மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த ஆன்லைன் தேர்வுகளில் பல […]
Anna-university-results-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய