கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது.

  • கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரும்.
  • மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.
  • மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை.
  • தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • நோய்த்தொற்று உள்ள மாணவர்களை கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT-PCR சோதனை எடுக்க வேண்டும்.
  • கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

Next Post

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு..

Tue Aug 24 , 2021
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு தற்போது அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதி இருந்த நிலையில் கடந்த […]
TET-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய