அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுத் தேதிகள் வெளியீடு – ஆசிரியர் தேர்வு வாரியம்

TNTRB தேர்வாணையம் மூலமாக 1098 காலிப்பணியிடங்களை கொண்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிகளுக்கான அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் ஜனவரி 2, 2020 முதல் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய பிப்ரவரி 2ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் கணினிவழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேதிகள் பெருந்தொற்றுச் சூழல், தேர்வு மையங்களின் தயார் நிலை, மற்றும் நிர்வாக வசதியைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Thu Sep 2 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 16,478 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,961 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 20 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 215 பேருக்கும்,சென்னையில் 166 […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய