
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து 19 செயகைக்கோள்களுடன் PSLV -C51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது .
இஸ்ரோ அமைப்பு 2021 ஆம் ஆண்டில் அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும் . PSLV-C51 செயற்கைக்கோளுடன் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 என்ற செயற்கைக்கோளும் ஏவப்பட்ட உள்ளது . அமேசானியா-1 செயற்கைக்கோளின் எடையானது 637 கிலோ மற்றும் அதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் ஆகும் .
நாளை 19 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாயவுள்ள PSLV -C51 செயற்கைகோளில் , 4 செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஸ்பேஸ் புரமோஷன் அண்ட் ஆத்தரஷேசன்(IN-SPACe) அமைப்புக்கும், 14 செயற்கைக்கோள்கள் என்எஸ்ஐஎல் அமைப்புக்கும் சொந்தமானதாகும்
ஸ்ரீஹரிகோட்டாவின் முதல் ஏவுதளத்திலிருந்து நாளை காலை 10.24 மணிக்கு PSLV-C51 செயற்கைகோள் விண்ணில் பாய்கிறது.இதற்கான கவுண்ட் டவுன் இன்று 8.45 மணிக்குத் தொடங்கியது .