தொழில்முறை ஆங்கிலப் படிப்பு : தமிழ்நாடு உயர்கல்விமன்றம் அறிவுறுத்தல் ..

தொழில் முறை ஆங்கிலப் படிப்பை அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முன்னோட்டமாக அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு உயா்கல்வி மன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில், கடந்த கல்வியாண்டில் (2020-2021) இளநிலை பிரிவில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு அமல்படுத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு கற்பிக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டிலும், முதல் மற்றும் இரண்டாவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பை முன்னோட்டமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அமல்படுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டில், மூன்றாவது மற்றும் நான்காவது பருவங்களில் தொழில்முறை ஆங்கிலப் படிப்பு அமல்படுத்தப்படும். அதற்கான, பாடத்திட்ட வடிவமைப்புகள் குறித்து அனைத்துக் கல்லூரிகளும் கருத்து தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு உயா்கல்வி மன்றத்தின் உறுப்பினா் செயலா் கிருஷ்ணசாமி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களுக்கு கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Next Post

இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..

Mon Oct 11 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,39,53,441 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,50,782 ஆக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,93,478 […]
mutated-type-of-corona-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய