
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இணையாக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன .இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,94,97,704 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .
தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனையின் பட்டியலை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது .இதன்படி ,தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்கிற முழு விவரத்தையும் இங்கு காணலாம் .
மக்களின் நலனுக்காக கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்கள் தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது .இது முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டம் மற்றும் மத்திய அரசின் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் செய்லபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .