கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் -மத்திய அரசு அறிவிப்பு..

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இதில் கர்ப்பிணிகள் மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில் கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா ,என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

இன்று மத்திய சுகாதாரத்துறை, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என இன்று ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் கர்ப்பிணிப் பெண்கள், ‘கோவின்’ வலைத்தளத்தில் பதிவு செய்தோ அல்லது அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கு நேரடியாக சென்றோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களக்கான கவுன்சிலிங் கிட் மற்றும் பொதுமக்களுக்கான தகவல் கையேடு ஆகியவை மாநில அரசுக்கு முறையாக அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Fri Jul 2 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 486, ஈரோட்டில் 395 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 238 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 97 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் […]
district-wise-corona-status-in-TN-2-7-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய