நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு – நாசா அறிவிப்பு..

நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி சட்டப் பிரச்சினைகள் காரணமாக 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

முதன்முதலில் அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி மனிதனை நிலவுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.பின்னர் நாசா விண்வெளி மையம் பலமுறை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை.

2024-ம் மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தனியார் விண்வெளி ஆய்வு மையமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. விண்வெளி வீரர்கள் பயணம் செய்வதற்காக ஆர்டிமிஸ் லூனர்-3 என்ற விண்வெளி ஓடத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் இதன் பணிகள் தாமதமாகி உள்ளதால்,இது சம்பந்தமாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதன் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா அறிவித்துள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Wed Nov 10 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 10,159 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 931 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,247 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
district-wise-corona-updates-10-11-2021

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய