உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு : மத்திய அரசு அறிவிப்பு..

சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தற்போது ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு கடைசி நேரத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாக மாணவர்கள் புகார் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்வுக்கு தயார் ஆவதற்காக ஜனவரிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு வளிக்கம் ஒன்றை அளித்துள்ளது.

இதன் காரணமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Post

இரண்டாம் கட்ட நீட் தேர்வு விண்ணப்பத்தில் முகவரி, கல்வித்தகுதி போன்றவற்றை திருத்தம் செய்ய அக்.10 வரை அவகாசம்..

Mon Oct 4 , 2021
முதல் கட்ட நீட் தேர்வு வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட நீட் தேர்வுக்கான வேலைப்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நீட் விண்ணப்பத்தில் குடியுரிமை, கல்வி தகுதி, முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்ய தற்போது அக்டோபர் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பங்களை திருத்திக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு ஜூலை 13ம் […]
NEET-Exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய