
சென்னையில் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருந்த பட்டியல் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து, சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தலைமை இயக்குநரக அலுவலகத்தில் வரும் 26-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகமை நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்று பரவல் தமிழகத்திலும் வீரியத்துடன் பரவி வருகிறது.இதன் காரணமாக சென்னையில் நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம்,அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் துணை அலுவலர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.