
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக,மாணவர்களின் நலன் கருதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால், தற்போது நடைபெற்று வரும் செய்முறைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தமிழக முதல்வர் அவர்கள் சுகாதாரத்துறை மற்றும் தலைமைச் செயலாளருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.இதில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கப்பட்டு மே 31 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தநிலையில்,தற்போது பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதேபோல்,CBSE, ICSE போன்ற பொதுத் தேர்வுகள் சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.மேலும், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ICSE – 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு