
இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது நுழைவுத் தோ்வு (சியுசிஇடி) 2021-22 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாகவும்,கொரோனா மூன்றாம் அலையை கருத்தில் கொண்டும் இளநிலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத் தேர்வானது அடுத்த 2022-23 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்றும் யுஜிசி அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில்,மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.இதில் ,மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் அனைத்து இளநிலை படிப்புகளிலும் மாணவா் சோ்க்கைக்கு பொது நுழைவுத் தோ்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நுழைவுத் தோ்வு நடைமுறை நிகழ் கல்வியாண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது,
கொரோனா பெருந்தொற்று காரணமாக, மத்திய பல்கலைக்கழக இளநிலைப் படிப்புகளில் 2021-22 கல்வியாண்டு மாணவா் சோ்க்கை, முந்தைய நடைமுறையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.மாணவா் சோ்க்கைக்கு சியுசிஇடி நுழைவுத் தோ்வு நடைமுறை அடுத்த 2022-23 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று யுஜிசி அமைப்பு அறிவித்துள்ளது.