
தமிழகத்தில் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கனமழை எச்சரிக்கை காரணமாக நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறஇருந்த தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு கனமழை இருப்பதால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறவிருந்த கணிதம், அறிவியல், சமூகவியல் பாடத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அறிவித்துள்ளார் .
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூடுதல் விவரங்களை தனித்தேர்வர்கள் தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.