
தமிழகம் முழுவதும் தற்போது ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க அரசு அறிவித்துள்ளது.அனால் இதற்கு முன்னதாகவே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டும் ,மேலும் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியிடப்படும் உள்ளது.இதன் காரணமாக மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு தயாராகி வருகின்றனர்.
தற்போது காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் ஜூலை 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதுகலை மாணவர் சேர்க்கை குறித்து முதுகலை மாணவர் சேர்க்கை குறித்து பல்கலையின் பதிவாளர் வெளியிட அறிக்கையில், இளங்கலையில் மாணவர்கள் அனைத்து செமஸ்டர்களிலும் பெற்ற மூன்றாம் பகுதி மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.மேலும் முன்னதாகவே விண்ணப்பித்த மாணவர்கள் தற்போதும் விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை என்றும், ஆனால் இணையத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண்களை உள்ளிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களுக்கு https://admissions.alagappauniversity.ac.in என்ற இணையதளத்திலும் மற்றும் 04565-223111/113 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.