இந்தியாவில் புதிதாக 11,106 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,89,623 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 459 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,65,082 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,97,921 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,789 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,26,620 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 114.46 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72,94,864 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,15,23,49,358 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Next Post

மாணவர்களுக்கான இளம் எழுத்தாளர்கள் கவிமணி விருது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

Sat Nov 20 , 2021
18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்கள் ரூ.25,000 ரொக்கம், கேடயத்துடன் கூடிய கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2021 – 2022ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் “கவிமணி விருது” வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை […]
Junior-Writers-exam
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய