கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு : போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு..

கொரோனவுக்கான மருந்தை போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.வைரஸ் செயல்பாட்டை குறைக்க ‘என்எஸ்பி 14’ என்ற வைரஸ் புரதத்தில் இந்த மருந்துகளின் கலவை செயல்படும்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் அங்கமான ரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 3 மருந்துகளின் கலவையானது கொரோனா நகலெடுப்பை குறைக்கும் என்று கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர் சிசிலியா அர்ரியானோ கூறுகையில், “இந்த மருந்துகளால் வைரஸ் நகலெடுப்பது 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பதை கண்டுள்ளோம். வைரஸ் செயல்பாட்டை குறைக்க ‘என்எஸ்பி 14’ என்ற வைரஸ் புரதத்தில் இந்த மருந்துகளின் கலவை செயல்படும்”என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மருந்தானது, கொரோனாவால் ஆஸ்பத்திரிகளில் சேர்வதை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2 மருந்துகள் மற்ற நோய்களுக்கு மருந்தாகவும், எஞ்சிய மருந்து சந்தை ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் காப்புரிமை பிரச்சினையால் மருந்துகளின் பெயர்களை வெளியிடவில்லை.

Next Post

தமிழ் வழியில் பட்டயப்படிப்புகள் அறிமுகம் ..

Thu Aug 26 , 2021
தமிழ் வழியில் பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2021 – 2022ம் ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.இதில் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பி.காம் பட்டயப்படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை ,மயிலாடுதுறை, […]
education-minister-ka-ponmudi
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய