
அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கணினி வழி தேர்வினை நடத்திட உத்தேச தேதியாக அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டது. அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) அக்டோபர் மாதம் 28 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று ( 12.10.2021 ) வெளியிடப்படுகின்றது.
இத்தேர்விற்கான , தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு ( Admit Card ) கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந் தொற்று சூழ்நிலை , தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availability of Examination Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
