
அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 12 : 12.2021 வரை காலை / மாலை இருவேளைகள் தேர்வு நடத்த திட்டமிட்டு , தேர்வுக்கான தேதி மற்றும் காலஅட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.11.2021 அன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு , முதல் அனுமதி சீட்டு ( Admit Card ) இன்று 01.12.2021 மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் , கர்ப்பிணிப் பெண்கள் உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரிக்கு தேர்வு மையம் மாறுதல் சார்ந்து தங்கள் கோரிக்கைகளை அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.