இன்று முதல் பிளஸ் 2 துணைத்தேர்வு தொடக்கம்..

தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2துணைத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.தமிழகத்தில் கொரோன பெருத்தொற்று காரணமாக பிளஸ் 2மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்ளுக்கான தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுதலாம் என பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது.

இதன்படி தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு இன்று (ஆக.6) தொடங்கி 19-ம்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்டமொழிப்பாடத் தேர்வுகள் நடை பெறும்.

இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 45,654 தனித் தேர்வர்கள் எழுதவுள்ளனர். அதனுடன் பிளஸ் 2 தேர்வு முடிவில் மதிப்பெண்ணில் திருப்தியில்லாத 25 பள்ளி மாணவர்களும் இத்தேர்வில் கலந்து கொள்கின்றனர்.

தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் தனிநபர்இடைவெளி, முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தொற்று அறிகுறி உள்ள தேர்வர்களை தனி அறையில் அமர வைத்து தேர்வெழுத அனுமதிக்கலாம் என்று துறை அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Post

பொறியியல் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..

Fri Aug 6 , 2021
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது பொறியியல் படிப்பில் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பட்டய படிப்பு (டிப்ளமோ) மற்றும் பட்ட படிப்பு (பிஎஸ்சி) போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் நேரடி 2 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் நேரடி 2 ஆம் ஆண்டு சேர்க்கையானது ஆகஸ்ட் 10 முதல் 30ம் தேதி வரை www.tnlea.com / www.accet.co.in […]
diploma-counselling-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய