
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணி முதல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை இணையதளத்திலிருந்து தேர்வு எண்மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போன்றே துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளித் தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் ,விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நேரில் பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு தலா 275 ரூபாய். மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாய், மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.