
பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள , அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றுமொரு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிகல்வித் துறை அறிவித்தது. தற்போது சமீபத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டது.
தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான பெயர்ப் பட்டியல்களில் மாணவர்களது தலைப்பெழுத்து , பெயர் , ( ஆங்கிலம் / தமிழ் ) பிறந்த தேதி , புகைப்படம் , பயிற்று மொழி ( Medium ) , மொழிப்பாடம் ( First Language ) ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளவும் , பள்ளியின் பெயரில் ( ஆங்கிலம் | தமிழ் ) திருத்தங்களை மேற்கொள்ளவும் தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

