
சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு உச்சநீதிமன்றம் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி 10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பீடு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர், மாணவா்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சிஐசிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பான அனைத்து மனுக்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணையின் முடிவில் 10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது.மேலும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.