பிளஸ் 2 துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6 முதல் தொடக்கம் ..

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு மொத்தம் 5 தேர்வு மையங்களை அரசு தேர்வுத்துறை அமைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதன் காரணமாக பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு கடந்த ஜூலை 19 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.வெளியிடப்பட்ட மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கூடுதல் மதிப்பெண்கள் தேவை எனும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்து. தேர்வுக்கு அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.மாணவர்கள் அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட பாடத்தேர்வுகளை எழுதுவதற்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 12 ம் வகுப்பு துணை தேர்வு ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான கால அட்டவணை :

06 .08.2021 – மொழிப்பாடம்

09.08.2021 – ஆங்கிலம்

11.08.2021 – இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி

13.08.201 – வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல்

16.08.2021 – கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, டெக்ஸ்டைல் மற்றும் டிரஸ் டிசைனிங்,நியூட்ரிஷியன், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட், வேளாண் அறிவியல், நர்சிங்

18.08.2021 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படைஎலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், , அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை

19.08.2021 – கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்டரி, ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல்

Next Post

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..

Fri Jul 30 , 2021
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு 2020-21 கல்வியாண்டிற்க்கான தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகியுள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-21 கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பது. இதனையடுத்து அவர்களுக்கான மதிப்பெண்களை, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் தலா 30 சதவீதமும், 12 ஆம் வகுப்பு […]
CBSE-12th-result-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய