
செப்டம்பர் 2021 மாதத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் ,தங்களது முடிவுகளை நவம்பர் 9 அன்று மதிப்பெண் பட்டியளாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக 09.11.2021 காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 2021 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களும் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.