
DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு )அமைப்பால் உருவாக்கப்பட்ட பினாகா ஏவுகணை ஆனது உள்நாட்டிலேயே முற்றிலுமாக உருவாக்கப்பட்டது ஆகும் .இந்த பினாகா ஏவுகணை ஆனது புதன்கிழமை வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது .
பினாகா ஏவுகணை சோதனையானது முற்றிலும் ஒடிசாவில் நடத்தப்பட்டது .ஒடிசா கடற்கரையின் சண்டிப்பூரின் ஏவுதளத்திலிருந்து ஆறு ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன .சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் வெற்றிகரமாக அதன் இலக்கை தாக்கி அழித்தன .
சோதனையில் வெற்றிகரமாக செயல்பட்ட ஏவுகணைகளை ராணுவத்தில் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.