உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயமில்லை – யுஜிசி அறிவிப்பு..

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயம் என்பதில் 2023-ம் ஆண்டு வரை விலக்கு அளித்துள்ளது. 2018-ல் கல்லூகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது பிஎச்டி கட்டாயம் என்ற நடைமுறையில் பல்கலைக்கழக மானியக்குழு 2023 வரை விலக்கு அளித்துள்ளது.

யுஜிசி வழிகாட்டுதல் 2009 மற்றும் வழிகாட்டுதல் 2016 ஆகிவற்றின் அடிப்படையில் பிஎச்.டி. முடித்தவர்களுக்கு நெட் அல்லது செட் தேர்வு தகுதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெற குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும், ஏழு ஆராய்ச்சித் தாள்களை வெளியிட்டிருக்க வேண்டும்.

பேராசிரியர் பதவி உயர்வு பெற, 10 ஆண்டுகள் பணி அனுபவமும், குறைந்தபட்சம் 10 ஆராய்ச்சி பேப்பர்களை வெளியிட்டிருக்க வேண்டும். கல்லூரி முதல்வர் பணியில் நியமிக்கப்படுபவர் பிஎச்.டி. முடித்திருப்பதோடு, 15 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதோடு ஆராய்ச்சி மதிப்பெண் 120 பெற்றிருக்க வேண்டும் எனவும் வரைவு வழிகாட்டுதலில் தெரிவித்திருந்தது.

உதவிப் பேராசிரியர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்புடன் நெட் (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) அல்லது செட் (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருப்பது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தது. அடுத்த ஆறு மாத காலங்களுக்குள் மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும் புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்திருந்தது.

Next Post

விரைவில் இந்தியாவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனை..

Wed Oct 13 , 2021
நாடு முழுவதும் கொரோன பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.தற்போது 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், பலரது உடலில் அதன்மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து வருவதால், சில நாடுகள் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடத்தொடங்கி உள்ளன. வேறு சில நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன. பயாலஜிக்கல்-இ என்ற மருந்து நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.இந்நிறுவனம் ஐதராபாத்தைச் சேர்ந்ததாகும்.ஏற்கனவே கோவிஷீல்டு […]
Booster-dose-in-India
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய