விரைவில் இந்தியாவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனை..

நாடு முழுவதும் கொரோன பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.தற்போது 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், பலரது உடலில் அதன்மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து வருவதால், சில நாடுகள் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடத்தொடங்கி உள்ளன. வேறு சில நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

பயாலஜிக்கல்-இ என்ற மருந்து நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.இந்நிறுவனம் ஐதராபாத்தைச் சேர்ந்ததாகும்.ஏற்கனவே கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரண்டில் எந்த தடுப்பூசியின் 2 ‘டோஸ்’களையும் செலுத்திக்கொண்டவர்கள் இந்த கோர்பேக்சஸ் தடுப்பூசியை 3-வது பூஸ்டர் டோசாக போட்டுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியை 18 முதல் 80 வயதானவர்களுக்கு செலுத்தலாம். இதன் 3-வது கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயாலஜிக்கல்-இ நிறுவனம் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இதற்கான அனுமதி கிடைத்து விடும் எனவும், அதன் பின்னர் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Wed Oct 13 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 15,650 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,833 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 19 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 173 பேரும், கோவையில் […]
district-wise-corona-updates-13-10-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய